கொய்யணி நறுமலர்க் கொன்றை யந்தார்
மையணி மிடறுடை மறையவனூர்
பையணி அரவொடு மான்மழுவாள்
கையணி பவனிடம் கடைமுடியே.
பொருள்: புதிதாய் கொய்யப்பட்ட நறுமணம் மிக்க கொன்றை மலர்களால் ஆன மாலையணிந்தவனே! கழுத்தில் விஷத்தை அடக்கியதால் நீலநிறமான கழுத்தினை உடையவனே! வேதங்களால் புகழப்படுபவனே! படம் கொண்ட பாம்பினையும், மான், மழு (கோடரி) ஆகிய ஆயுதங்களையும் கொண்ட சிவனே! நீ "திருக்கடைமுடி' என்னும் தலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்கிறாய்
No comments:
Post a Comment